பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
மலையாளத்தில் வெளிவந்த ஹெலன் படம் தமிழில் அன்பிற்கினியாள் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதே படத்தின் இந்தி ரீமேக்தான் மிலி. இதில் ஜான்வி கபூர் நடித்திருக்கிறார். ஒரு பாஸ்ட் புட் கடையின் பிரீசர் அறைக்குள் மாட்டிக் கொள்ளும் ஒரு பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறாள் என்கிற கதை.
முதலில் தியேட்டரில் வெளியாகி பின்னர் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான இந்த படம் கடந்து ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட பாலிவுட் படம் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “சவாலான கதைக்களத்தையும் தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஜான்வி கபூரின் 'மிலிக் சர்வைவல் டிராமாவாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது. பார்வையாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடம் இருந்து கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பைத் தொடர்ந்து 'மிலிக் திரைப்படம் இந்தியன் ஓடிடி டொமைனில் முதல் இடத்தையும், திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் ட்ரெண்டிங் டாப்பிக்காகவும் உள்ளது.
தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படத்திலும் தொடர்ச்சியாக தனது நடிப்புத் திறமைக்கு சவால் விடுக்கும் கதாபாத்திரங்களையே ஜான்வி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். எங்களின் கடின உழைப்பானது படத்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கிறது” என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.