பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பாலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம்வரும் போனிகபூர் தற்போது தமிழில் கவனம் செலுத்தி தொடர்ந்து அஜித் நடிக்கும் படங்களை தயாரித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது அவரது தயாரிப்பில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்த நிலையில் இந்தியில் தனது மகள் ஜான்வி கபூர் நடிப்பில், மலையாளத்திலிருந்து இந்தி ரீமேக்காக உருவாகியுள்ள மிலி என்கிற படத்தை தயாரித்துள்ளார் போனிகபூர். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கபில் சர்மாவின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டபோது படத்தயாரிப்பு, ஹீரோக்களின் அர்ப்பணிப்பு குறித்து சில விஷயங்களை வெளிப்படையாகவே பேசினார்.
குறிப்பாக அஜித் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற்று வருகிறதே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, “ஒரு படத்தில் நடிக்கும் பெரிய ஹீரோ, படப்பிடிப்பை விரைவில் முடிக்கும்படி குறைந்த நாட்களே ஒதுக்கி நடிக்கும்போது அந்த படம் ஒருபோதும் வெற்றி அடைவதில்லை. இதை நான் பலமுறை பார்த்து இருக்கிறேன்.. படத்திற்கு தேதி கொடுக்கும்போதே எத்தனை நாட்களுக்குள் படப்பிடிப்பை முடிப்பீர்கள் என்று அவர்களின் வசதியை தான் பார்க்கிறார்கள். படப்பிடிப்பிற்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் தங்கள் உழைப்பை கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. 25-30 நாட்கள் நடித்துவிட்டு முழு சம்பளமும் வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இதனாலேயே பல ஹீரோக்களின் படங்கள் தோல்வி அடைகின்றன” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் எந்த நடிகரின் பெயரையும் வெளிப்படையாக குறிப்பிடாவிட்டாலும் அவரது பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் பலரும், வருடத்திற்கு நான்கைந்து படங்கள் ரிலீஸ் செய்யும் அக்சய் குமார் பற்றிதான் அவர் குறிப்பிடுகிறார் என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் சொல்வதற்கு ஏற்ப அக்சய் குமாரும் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..