நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
அஜய் தேவ்கன் - சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ள பாலிவுட் படம் 'தேங்க் காட்'. இந்தர் குமார் இயக்கி உள்ள இந்த படம் வரும் அக்டோபர் 24ம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் குறிப்பிட்ட மதப் பிரிவினரை புண்படுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி, உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் நீதிமன்றத்தில் மான்ஷு ஸ்ரீவஸ்தவாவ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திர குமார் இயக்கத்தில் வெளியாகும் 'தேங்க் காட்க் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் கோட் சூட் அணிந்தபடி, தன்னை சித்ரகுப்தனாக சித்தரித்து நடிகர் அஜய் தேவ்கன், குறிப்பிட்ட பிரிவினரை புண்படுத்தும் விதமாக நடித்துள்ளார். சித்ரகுப்தன் கர்மாவின் இறைவனாகக் கருதப்படுகிறார். அவர் ஒவ்வொரு மனிதனின் பாவ, புண்ணிய செயல்களின் கண்காணித்து பதிவு செய்யும் கடவுள்.
இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், விசாரணையை வரும் நவம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. ஆனால் படம் அக்டோபர் மாதமே வெளிவருவது குறிப்பிடத்தக்கது.