'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
பாலிவுட்டில் கடந்த சில வாரங்களாகவே 'பாய்காட்' டிரெண்டிங் அதிகமாக இருந்து வந்தது. அதில் சில படங்கள் சிக்கி தோல்வியைத் தழுவியது. அது போலவே ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன் மற்றும் பலர் நடித்து இரு தினங்களுக்கு முன்பு வெளிவந்த 'பிரம்மாஸ்திரா' படமும் சிக்கியது. எதிர்ப்பு அலைகளில் சிக்கி இந்தப் படமும் வசூலில் தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த இரண்டு நாட்களில் இந்தப் படம் 70 கோடிகளைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் இன்றைய வசூலுடன் 100 கோடியைக் கடந்துவிடும் என்கிறார்கள். தென்னிந்தியாவிலும் படத்தின் வசூல் மோசமாக இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் சுமார் 5 கோடிக்கு விற்கப்பட்ட படம் அந்த வசூலை முதல் நாளிலேயே பெறறுவிட்டதாம். நேற்றுடன் படத்திற்கான 'பிரேக் ஈவன்' கிடைத்துவிட்டது என்கிறார்கள். இரண்டாம் நாளிலேயே படம் லாபத்தைப் பார்க்க ஆரம்பித்துவிட்டதாகவும், இனி வசூலாகும் தொகை கூடுதல் லாபக் கணக்கில்தான் சேரும் என்றும் தகவல்.
தமிழிலும் கூட இப்படம் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். ஹிந்தி வசூல் எவ்வளவு போகும் என்பது அடுத்து வரும் நாட்களில் தெரியும்.