அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா | பிளாஷ்பேக்: அருணாச்சலம் முன்னோடி 'பணம் படுத்தும் பாடு' | என்னது, பாகுபலி பிரபாஸ் வயது 46 ஆ? | 2ம் பாக ஜுரம் தான் மலைக்கோட்டை வாலிபன் தோல்விக்கு காரணம் : தயாரிப்பாளர் சொன்ன புது தகவல் | எதிர்த்துப் போட்டியிட்ட வில்லன் நடிகரையும் உதவிக்கு இணைத்துக் கொண்ட ஸ்வேதா மேனன் | ஹாட்ரிக் வெற்றியால் படு பிஸியான பிரதீப் ரங்கநாதன் |
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பயோபிக் படங்களில் ஆர்வத்தோடு நடிப்பவர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ஜான்சி ராணி கேரக்டர்களில் நடித்துள்ளார். அடுத்து அவர் முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க முடிவு செய்தார். இதனை அவரே தயாரிக்கிறார், இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக அவரது கதை இலாகா பணியாற்றி வருகிறது.
கங்கனா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் பாணியிலான ஆக்ஷன் படம் தக்காட் பெரிய தோல்வியை சந்தித்தது. சுமார் 90 கோடியில் தயாரான படம் 3 கோடிதான் வசூலித்தது. இதற்கெல்லாம் கலங்காத கங்கனா அடுத்த அதிரடியில் இறங்கி உள்ளார். தனது கதை இலாகா எழுதி முடித்துள்ள இந்திராவின் வாழ்க்கை வரலாற்று கதையை எமெர்ஜென்சி என்ற பெயரில் படமாக்குகிறார். இந்த படத்தை வேறொருவர் இயக்குவதாக இருந்தது. தற்போது இதனை கங்கனாவே இயக்கி நடிக்க முடிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் இந்திராவால் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி காலத்தில் மக்கள் பட்ட துயரங்களும், அப்போதைய இந்திராவின் நடவடிக்கைகளும் முக்கியமாக இருக்குமாம். பாரதிய ஜனதா காட்சியின் சார்பாளர் என்று கருதப்படும் கங்கனா இயக்கும் இந்திரா படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. இந்த படத்தை தனது தயாரிப்பில் இருந்து விடுவித்து, தக்காட் படத்தை தயாரித்த நிறுவனத்திற்கு கொடுக்க இருக்கிறாராம்.