பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டியூட்' படம் ரூ 100 கோடியை எட்டியுள்ளது. அடுத்து என்ன படங்களில் நடிக்கிறார் என்று விசாரித்தால், இப்போது விக்னேஷ்சிவன் இயக்கும் 'எல்ஐகே' படத்தில் நடித்து வருகிறார். டிசம்பர் 18ல் அந்த படம் ரிலீஸ். அதற்கடுத்து, ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பல ஆண்டுகளாக அவரின் உதவி இயக்குனராக இருந்த ஒருவரே அந்த படத்தை இயக்குகிறார்.
அதற்கடுத்து பெரிய பட்ஜெட்டில், ஒரு பக்கா ஆக்ஷன் கதையில் நடிக்கப்போகிறார். 'டிராகன்' பெரிய வெற்றி பெற்றநிலையில், மீண்டும் அஸ்வத் மாரிமுத்து உடன் இணையவும் வாய்ப்புள்ளது. 'லவ் டுடே, டிராகன், டியூட்' என வரிசையாக மூன்று படங்களும் 100 கோடி வசூலை தாண்டி ஹிட் அடித்துள்ளதால், இன்னும் 2 ஆண்டுகளுக்கு பிரதீப் ரங்கநாதன் கால்ஷீட் பிஸி.
டியூட் படம் தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்றுள்ளதால், பிரதீப் ரங்கநாதன் மார்க்கெட், சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளதாம். பிரதீப் ரங்கநாதனால் அதிகம் லாபம் சம்பாதித்தது ஏஜிஎஸ் நிறுவனம்தான். அவரின் 'லவ்டுடே, டிராகன்' படங்களை தயாரித்து பல கோடி லாபம் ஈட்டியது. இப்போது டியூட் படத்தின் தமிழக உரிமையையும் அவர்களே பெற்று இருக்கிறார்கள். இதனால், சில கோடி லாபம். அடுத்தும் அவரை வைத்து படம் தயாரிக்கப்போகிறார்கள். அதிலும் டேபிள் பிராபிட் கிடைக்க வாய்ப்பு என்கிறார்கள் கோலிவுட்டில்.