டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தற்போது அஜித்தின் படங்களை தொடர்ந்து தயாரித்து வருபவருமான பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர். தனது வாரிசுகளான ஜான்வி கபூர், அர்ஜுன் கபூர் ஆகியோரை அவர்களது விருப்பப்படியே நடிகர்களாக களமிறக்கி உள்ளார். இதைத் தொடர்ந்து அவரது இன்னொரு மகனான குஷி கபூரும் விரைவில் நடிப்பில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார். அதேசமயம் அவரது இன்னொரு மகளான அன்சுலா கபூர் நடிப்பில் நாட்டமில்லாமல் தொழிலதிபராக தனது பாதையை மாற்றிக் கொண்டு விட்டார்.
ஆனால் சில மாதங்களுக்கு முன்பு போனிகபூர் ஒரு பேட்டியில் கூறும்போது அன்சுலா கபூரும் நடிகையாக மாறிவிட்டால் பைவ்ஸ்டார் பேமிலி என்கிற பெயர் எங்கள் குடும்பத்திற்கு கிடைத்துவிடும் என தனது விருப்பத்தை கூறினார்.
இந்த செய்தி மீடியாவில் பரபரப்பாகவே அவரது மகளோ போனி கபூரிடம் தனக்கு நடிப்பில் விருப்பமில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து அடுத்த பேட்டிகளில் போனி கபூர் தனது மகள் அன்சுலா கபூர் பற்றி பேசும்போது, “நான் என் விருப்பத்தை தான் ஜாலியாக கூறினேனே தவிர, என் மகள் தற்போது அவள் விரும்பும் தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார்” என்று கூறியுள்ளார்.