டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு மிகப்பெரிய அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்த படம் அர்ஜுன் ரெட்டி. அந்த படம் பின்னர் ஹிந்தியில் ஷாகித் கபூர் நடிக்க கபீர் சிங் என்கிற பெயரில் ரீமேக் ஆக வெளியாகி அங்கேயும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் கதாநாயகன் பெரும்பாலும் மதுவுக்கும் சிகரெட்டும் அடிமையானவனாகவும் பின் அதிலிருந்து மீண்டு வருவதாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த படத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ள சாகித் கபூர், “கபீர் சிங் படத்தில் நடித்த பிறகு நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டேன். அந்த படத்தில் நடித்தபோது தினமும் இருபது சிகரெட்டுகள் வரை குடிக்க வேண்டியிருந்தது. படப்பிடிப்பு முடிந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்தே சிகரெட் வாடை என்னிடமிருந்து அகன்றது. அதன்பின்னரே நான் வீட்டிற்கு சென்று மனைவியையும் குழந்தைகளையும் சந்திக்க முடிந்தது. தொடர்ந்து இப்படியே நடந்ததால் அடுத்து வந்த நாட்களில் நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தையே நிறுத்தி விட்டேன்'' என்று கூறியுள்ளார்