தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
பாலிவுட்டின் பிரபல நடிகை கரீனா கபூர். தற்போது ஆமீர்கான் உடன் ‛லால் சிங் சத்தா' என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமா தவிர்த்து நிறைய விளம்பர படங்களிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார். சமீபத்தில் நகைக்கடை ஒன்றின் விளம்பரத்தில் நடித்திருந்தார். அதில் அக் ஷயை திரிதியை முன்னிட்டு அந்த விளம்பரம் உருவாக்கப்பட்டிருந்தது.
விளம்பரத்தில் கரீனா கபூர் நெற்றியில் பொட்டு வைக்காமல் காணப்படுகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கரீனாவின் இந்த செயல் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக கூறி அவருக்கு எதிராக சமூகவலைதளங்களில் திட்டி தீர்த்து வருகின்றனர். ‛‛ஒரு திருமணமான இந்து பெண் நெற்றியில் பொட்டு வைக்காமல் இப்படி தான் பணத்திற்காக விளம்பரத்தில் நடிப்பதா''. ‛‛இதுபோன்ற பண்டிகை காலங்களில் இந்து பெண்கள் அதிலும் திருமணமான பெண்கள் எந்த மாதிரியாக இருப்பார்கள் என்பது கூட கரீனாவிற்கு தெரியாதா, இந்து தர்மம் என்னவென்று அவருக்கு தெரியாதா''. ‛‛திருமணமான இந்து பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது என்பது முக்கியமான விஷயம்'' என இப்படி பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதோடு கரீனாவை புறக்கணிக்க வேண்டும். பொட்டு இல்லையென்றால் பிசினஸூம் இல்லை என டிரெண்ட்டும் செய்தனர்.