காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'கங்குபாய் கத்தியவாடி' படம் மூலம் விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். அடுத்த வாரம் ஆலியா தெலுங்கில் அறிமுகமாகும் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளிவர உள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு மார்ச் 15ம் தேதி ஆலியா பட்டின் பிறந்தநாள். தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தை மாலத் தீவில் உள்ள தனியார் தீவு ஒன்றில் கொண்டாடியுள்ளார் ஆலியா.
தனது பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றிய வீடியோ ஒன்றை, “இது 29, உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றி” என்று பதிவிட்டு வெளியிட்டுள்ளார். பிகினி உடையில் ஆலியா இருக்கும் காட்சியுடன் ஆரம்பமாகும் அந்த சிறிய வீடியோவிற்கு இதுவரையில் 19 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன. பல பிரபலங்களும் ஆலியாவிற்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.