டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழில் மல்லி மிஸ்து என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மாடல் அழகி அர்ஷி கான். தி லாஸ்ட் எம்பரர் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சில் கலந்து கொண்டு பிரபலமானார். ஹிந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். வெப் சீரிசிலும் இசை ஆல்பங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது அவர் மல்யுத்த வீராங்கணையாக நடிக்க இருக்கும் படத்திற்காக பிரபல மல்யுத்த வீரர் தி கிரேட் காளியிடம் மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அர்ஷி கான் நேற்று முன்தினம் டில்லி மால்வியா நகர் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கார் சாலையோர தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அர்ஷி கான், உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து டில்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் அவர், விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.