ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
போட்டி அதிகம் நிறைந்த பாலிவுட் திரையுலகில் ஒரு முன்னணி ஹீரோவாக நீண்ட காலம் நிலைத்து நிற்பது கடினமான விஷயம். ஆனால் நடிகர் அஜய் தேவ்கன் பாலிவுட்டில் தனது திரையுலக பயணத்தில் 30ம் வருடத்தை தொட்டு இன்றைக்கும் முன்னணி ஹீரோவாகவே வலம் வருகிறார். இதைதொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இயக்குனர் ராஜமவுலியும் அஜய் தேவ்கனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்..
“அர்ப்பணிப்பு உணர்வமும் சினிமா மீதான ஆர்வமும் கொண்டு முப்பது வருடத்தை கடந்து சாதனை செய்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள்.. இந்த பயணத்தில் உங்களுடன் மக்கி மற்றும் ஆர்ஆர்ஆர் படங்களில் இணைந்து பணியாற்றியதில் பெருமிதப்படுகிறேன்” என கூறியுள்ளார். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல, ராஜமவுலியின் ஈகா படம் இந்தியில் மக்கி என்கிற பெயரில் வெளியானபோது அதில் ஈக்காக குரல் கொடுத்தவர் அஜய் தேவ்கன் தான்.