விக்ரமின் அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவல் இதோ | காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை | தி மெட்ராஸ் மிஸ்டரி வெப் தொடரின் முதல் பார்வை | செல்போனை அதிகமாக யூஸ் பண்ணும் ஸ்ருதிஹாசன் | புதிய பட நிறுவனம் தொடங்கி கதையின் நாயகியாக உருவெடுக்கும் சிம்ரன் | மோசமான தோல்வியை சந்தித்த அனுஷ்காவின் காட்டி | கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள்... : ரவி மோகனை வாழ்த்திய பாடகி கெனிஷா | ஹீரோவாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் | காக்கா முட்டை, சைவம், அநீதி, விசாரணை படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை : ஜிவி பிரகாஷ் | கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள் : காணிக்கை வழங்கிய இளையராஜா |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரின் மேனேஜர் குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு சர்ச்சை பரவியது. அந்த நடிகருக்கு மட்டுமல்லாது, சில முன்னணி நடிகைகளுக்கும் அவர் மேனேஜர் ஆக இருக்கிறார். அவரிடம் உள்ள நடிகைகள் பற்றி நாளிதழ்கள், சமூக வலைத்தளங்கள், டிவி சானல்கள், என பாசிட்டிவ்வான செய்திகளை வரவழைப்பது அவர் வழக்கமாம். அது மட்டுமல்லாது பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளையும் அவர் தேடித் தருகிறாராம். அதனால், சில நடிகைகள் அவரை தங்களது மேனேஜர் ஆகப் பணி புரிய வைத்துள்ளார்கள்.
அதேசமயம், அவரிடமிருந்து விலகிச் செல்லும் நடிகைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் 'டிரோல்' செய்வதற்கும் மற்ற செய்தித் தளங்களில் செய்திகளை வரவழைக்கவும் ஆட்களை செட் செய்து வைத்துள்ளாராம். அதனால், அவர்களுக்கு புதிதாக நல்ல வாய்ப்புகள் கிடைக்காதபடி பார்த்துக் கொள்கிறாராம். இதுதான் அந்த மேனேஜர் பற்றி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக வந்த செய்தி.
தழிழில் ஒன்றிரண்டு வெற்றிப் படங்களில் நடித்த ஒரு நாயகி, அந்த மேனேஜர் வேண்டாமென விலகியுள்ளார். வெற்றிப் படங்களில் நடித்த பின்பும், அவர் தன்னை விட்டு விலகியதால் புதிய வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்காதபடி செய்துவிட்டாராம். இப்படித்தான் இதற்கு முன்பும் ஒரு மேனேஜர் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார். தற்போது அவர் கைவசம் ஒரு நடிகை கூட இல்லை, நடிகர் கூட இல்லை என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
அரசியலில் தீவிரமாக செயல்பட உள்ள நடிகர் தனது மேனேஜர் குறித்து தெரிந்து வைத்துள்ளாரா இல்லையா என்றும் கோலிவுட்டில் கேள்வி கேட்கிறார்கள்.