விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா |

தளபதி நடிகரின் கடைசி படத்தில், அவருடன் ஏற்கனவே மூன்று எழுத்து படத்தில் நடித்த, மும்பை நடிகை இணைந்திருக்கும் நிலையில், இன்னொரு கேரளத்து நடிகையும் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், கேரளத்து அம்மணிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க துவங்கி விட்டார், படத்தின் இயக்குனர். இதையடுத்து, செம கடுப்பான மும்பை நடிகை, 'படத்தில் எனக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்னை, 'ஹீரோயின்' ஆக, 'புக்' பண்ணி விட்டு, அந்த கேரளத்து நடிகைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், படத்தில் நடிக்க மாட்டேன். மும்பைக்கு பறந்து விடுவேன்...' என்று இயக்குனரை மிரட்டி வருகிறார். இதனால், அவர்களின் இந்த பஞ்சாயத்து இப்போது தளபதி நடிகரின் கவனத்துக்கு போயிருக்கிறது.




