நவம்பர் 8ல் ஒரே ஒரு வெளியீடு… | ஏழை மக்களை கவுரவித்த மீனாட்சி சேஷாத்ரி, ராகுல் ராய், தீபக் திஜோரி | பாலியல் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை: மஞ்சு வாரியர் வழக்கு தள்ளுபடி | 10 ஆயிரம் தியேட்டர்களில் 'கங்குவா' ரிலீஸ்? | ஹர்பஜன் சிங் நடிக்கும் 'சேவியர்' படத்தில் நாயகியான ஓவியா | பாடம் கற்றுத் தந்த பிச்சைக்காரன் | தமிழில் அறிமுகமாகும் கேரள மாடல் | பிரபல போஜ்புரி பாடகி சாரதா சின்கா காலமானார் | தண்டேல் பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு | 'ராமாயணா' - 2026 தீபாவளி வெளியீடு |
டிவி சீரியலில் நடிக்க ஆரம்பித்து சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே கவனிக்கப்படாதவர் அந்த நடிகர். அந்தப் படம் வந்து போனதே பலருக்கும் தெரியாது. அதற்குப் பின் ஓரிரு வருட இடைவெளிக்குப் பிறகு ஓடிடியில் நேரடியாக வெளியான ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கடுத்து அப்பாவை செல்லமாக அழைக்கும் படத்தில் நடித்தார். தியேட்டரில் வெளியான அந்தப் படம் குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்தது.
அதன்பின் தான் அவரது அணுகுமுறை அப்படியே மாறிவிட்டதாம். அதற்கடுத்து அவரை அணுகிய தயாரிப்பாளர்களை பல கோடி சம்பளம் கேட்டு ஓடவிட்டிருக்கிறார்கள். இந்த வருடம் அவர் நடித்து வந்த ஒரு படத்திற்கு வெற்று பில்டப் கொடுத்து ஓட வைக்கப் பார்த்தார்கள். ஆனால், அது ஓடவேயில்லை. அது போலவே கடந்த வாரம் வெளியான ஒரு 'பிச்சைக்காரன்' படத்திற்கும் பில்டப் கொடுத்து ஓட வைக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், படத்தைப் பார்க்க தியேட்டர்களுக்குப் போனவர்கள்தான் தெறித்து ஓடி வந்தார்களாம். ஒரு சில நாட்கள் என்னென்னவோ செய்து பார்த்திருக்கிறார்கள். இப்போது எத்தனை கோடி நஷ்டம் வரும் என கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
ஒரே வெற்றியில் தலை, கால் தெரியாமல் ஆடிய அந்த நடிகருக்கு பிச்சைக்காரன் நல்லதொரு பாடம் எடுத்திருக்கிறார் என கோலிவுட்டில் ஹாட் டாபிக் ஆக அந்தப் படத் தோல்வியைத்தான் பேசுகிறார்களாம். அவரை வைத்து அடுத்து படங்களை எடுத்துள்ள தயாரிப்பாளர்கள் வியாபாரத்திற்கு என்ன செய்வது என தவிப்பதாகத் தகவல்.