'புஷ்பா 2' படத்திற்கு இசையமைக்கும் 4 இசையமைப்பாளர்கள்? | தமிழ் சினிமாவில் அடுத்த அதிர்ச்சி - இளம் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார் | சின்னத்திரை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் கவுதமி! | குழந்தைகள் தினத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட விழிப்புணர்வு செய்தி! | சொர்க்கவாசலில் ஜெயில் கைதிகளின் வாழ்க்கை | 'எனை சுடும் பனி': மீண்டும் ஒரு பொள்ளாச்சி கதை | 'ப்ரீடம் அட் மிட்நைட்': இன்று வெளியானது | பிளாஷ்பேக்: லைவ் சவுண்டில் உருவான 'தூரத்து இடி முழக்கம்' | யஷ், நயன்தாரா படத்திற்காக வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் | பிளாஷ்பேக்: அந்த காலத்து வாலிபர் சங்கம் |
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பார்கள். அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள் நம் தமிழ் ஹீரோக்கள். இந்நிலையில் தமிழில் இருந்து தெலுங்கு நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் இங்கிருக்கும் ஹீரோக்கள்.
சில ஆண்டுகளாக ரொம்பவே தடுமாறிக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா. அதற்கு முக்கிய காரணம் தியேட்டர்கள் எண்ணிக்கை குறைந்ததே. மூவாயிரத்துக்கு மேற்பட்ட தியேட்டர்கள் இருந்த தமிழ்நாட்டில் இப்போது ஆயிரம் தியேட்டர்கள் கூட இல்லை. சாட்டிலைட்டை நம்பி தியேட்டர்கள் அழிவதை வேடிக்கை பார்த்த தமிழ் சினிமாக்காரர்கள் சேனல்கள் கைவிட்டதால் தவிக்கிறார்கள். மார்க்கெட் உள்ள நான்கைந்து ஹீரோக்களை தொங்கியபடியே கதறிக்கொண்டே இருக்கிறது தமிழ் சினிமா.
தெலுங்கு சினிமாவிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான். ஹீரோக்கள் தான் எல்லாமே. முக்கியமாக இரண்டு குடும்பத்து வாரிசுகள் தான் தெலுங்கு சினிமாவை ஆக்கிரமித்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமா அளவுக்கு மோசமான நிலையில் தெலுங்கு சினிமா இல்லை. எந்த படம் வந்தாலும் மினிமம் கேரண்டி வசூல் உண்டு. காரணம் மூவாயிரத்து ஐநூறு கொண்ட தியேட்டர் எண்ணிக்கை. அதில் பெரும்பாலும் பி. சி எனப்படும் தியேட்டர்கள் தான். இந்த தியேட்டர்களில் ஐம்பது ரூபாய்க்கு மேல் டிக்கெட் விலை கிடையாது. எனவே பாமர மக்கள் சினிமாவை ஆதரிக்கின்றனர். தமிழ் சினிமா போல பரிட்சார்த்த முயற்சிகள் எதுவும் பண்ணுவதில்லை. ஆனால் வருகிற ரசிகர்களை ஏமாற்றாத அளவுக்கு மசாலா சேர்த்து சமைக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பே சூர்யா, விஷால், கார்த்தி, விஜய் ஆண்டனி போன்றோர் தெலுங்கு பக்கம் அடிவைக்க தொடங்கி விட்டனர். தங்களது படங்கள் வரிசையாக தெலுங்கில் ரிலீஸ் ஆவதுபோல் பார்த்துக் கொள்ளும் இவர்கள், கதை கேட்கும்போதே இரண்டு மொழிகளுக்கும் ஏற்றாற்போலயே கேட்கிறார்கள். இந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்தவர்கள் விஜய், விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன்.
விஜய்
நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அதற்குப் பிறகு அவர் நடிக்க 67வது படத்தை பிரபல தெலுங்குத் தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்க உள்ளார். கார்த்தி, நாகார்ஜுனா நடித்த 'தோழா' படத்தை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இப்படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தைத் தெலுங்கிலும் நேரடியாக தயாரிக்க உள்ளனர். அது மட்டுமல்ல பான்-இந்தியா படமாக தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிடும் எண்ணம் உள்ளதாம். அதனால் இந்த படத்திற்காக விஜய்க்கு ரூ.100 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. விஜய் நடித்த 'மாஸ்டர்' படமும் தெலுங்கு, ஹிந்தியில் வெளியானது. ஆனால், தெலுங்கில் மட்டும் தான் வெற்றி பெற்றது. ஹிந்தியில் படுதோல்வி அடைந்தது.
விஜய் சேதுபதி
நேரடி தெலுங்கு படமான 'உப்பெனா' படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் சேதுபதியின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. விஜய் சேதுபதிக்கு தெலுங்கு சினிமாவில் உருவாகும் புதிய மார்க்கெட்டை, பல தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதற்காக, விஜய் சேதுபதி நடித்து வெற்றி பெற்ற பழைய படங்களின் தெலுங்கு டப்பிங் உரிமையைக் கைப்பற்ற தமிழ் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். அதன் முதல் கட்டமாக, 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை சமீபத்தில் பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், விஜய் சேதுபதி இனி நடிக்கும் படங்களின் தெலுங்கு உரிமையைக் கைப்பற்றவும் கடும்போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரடி தெலுங்கு படங்களிலும் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். சில படங்களில் வில்லன் வேடத்துக்கும் 2 படங்களில் ஹீரோவாக நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் டான், அயலான் படங்கள் தயாராகி வருகின்றன. அதன்பிறகு தெலுங்கில் ஒரு படம் நடிக்கிறார். இது அவரது முதல் நேரடித் தெலுங்குப் படம். ஜதி ரத்னலு சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய அனுதீப் இந்தப் படத்தை இயக்குகிறார். சமீபத்தில் சேகர் கம்முலா இயக்கத்தில் வந்து வெற்றி பெற்ற நாக சைதன்யாவின் லவ் ஸ்டோரி படத்தை தயாரித்த நாராயண் தாஸ் நரங் இந்தப் படத்தை தயாரிக்கிறார். தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் படத்தை வெளியிடுவதாகத் திட்டம்.
முன்தயாரிப்பில் இருக்கும் இந்தப் படத்துக்காக சிவகார்த்திகேயனுக்கு 25 கோடிகள் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக பிரபல தெலுங்கு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தமிழில் அதைவிட மிகக்குறைவான சம்பளமே பெறுகிறார். தெலுங்கு இன்டஸ்ட்ரி தமிழைவிட பெரிது என்பதாலும், தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் படத்தை வெளியிட இருப்பதாலும் இந்த சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் வருண் டாக்டர் என்ற பெயரில் வெளியாகியது.
தனுஷ்
அடுத்து தனுஷ் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார். தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிரமமின்றி நடித்து சிறந்து விளங்கும் பன்முக திறமை வாய்ந்தவர். தற்போது தெலுங்கு திரையுலகில் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது முதல் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார். வணிக ரீதியான வெற்றிகளின் படங்களை இயக்குவதில் கம்முலா ஒரு மாஸ்டர்.
நடிகர் தனுசுக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் இதுவரை வாங்கிய சம்பளத்தில் இது மிக அதிகம். அதேசமயம் இந்த படத்திற்கு முன்பாகவே தனுஷ் நடிக்கும் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகிவிட்டது. வெங்கி அட்லுரி இயக்கும் இரு மொழி படத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு தமிழில் வாத்தி எனவும், தெலுங்கில் சார் எனவும் பெயரிட்டுள்ளனர்.
இவர்கள் தவிர ஹரிஷ் கல்யாண், அசோக் செல்வன் என இளம் ஹீரோக்களும் தெலுங்கு நேரடி படங்களில் நடிக்கவும் இரு மொழி படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டுகிறார்கள். தெலுங்கு ரசிகர்களுக்கு தெலுங்கு நேரடி படங்களை விட தமிழ் டப்பிங் படங்கள் பிடித்திருக்கிறது. தமிழில் பெரிதாக போகாத சில படங்கள் கூட தெலுங்கில் நன்றாக போனது. தெலுங்கை விட தமிழில் கதையும், தொழில்நுட்பமும் நன்றாக இருக்கிறது என்பதால் ரசிக்கிறார்கள்.
தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரிடம் இதுபற்றி கேட்டோம்
ஊர்க்குருவி என்னதான் பறந்தாலும் பருந்து ஆகமுடியாது என்பதைப்போல தெலுங்கு படங்கள் என்றைக்குமே தெலுங்கு படங்கள் தான். தெலுங்கு படங்களுக்கு ஆந்திராவைத் தவிர அமெரிக்காவில் மட்டுமே மார்க்கெட் இருக்கிறது. ஆனால் தமிழ் படங்களுக்கு உலகளாவிய மார்க்கெட் இருக்கிறது. தமிழ் கலைஞர்களை போல தெலுங்கு கலைஞர்களை உலக நாடுகளில் பரிச்சயம் இல்லை. தமிழ் மக்கள் உலகம் முழுக்க பரவி இருக்கிறார்கள். இதுதான் தமிழை நோக்கி தெலுங்கு ஹீரோக்கள் வர காரணம். ஹிந்திக்கு அடுத்து தமிழ் தான் பாப்புலாரிட்டியில் பெஸ்ட்.
ஆனால் தமிழ் ஹீரோக்களை தெலுங்கில் ஏற்றுகொள்வது போல தெலுங்கு ஹீரோக்களை இங்கே ஏற்றுகொள்வது இல்லை. கோடிக்கணக்கில் வாங்கி வெளியிடப்படும் டப்பிங் படங்கள் அந்த அளவுக்கு கலெக்ஷன் ஆவதில்லை. நம்ம மக்கள் தெலுங்கு ஹீரோக்களை தள்ளியே வைக்கிறார்கள்.
தெலுங்கில் இயக்குநர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் தருகிறார்கள். அதேபோல் ஸ்க்ரிப்ட் எழுத்தாளர்களுக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் தருகிறார்கள். இங்கே இவர்களை மதிப்பதே இல்லை. தெலுங்கில் வசனம் எழுதுபவர்களே நான்கைந்து கோடிகளை சம்பளம் வாங்குகிறார்கள்'' என்று விளக்கினார்.
ஹீரோயின்களை பற்றி கேட்கவே வேண்டாம். குறுகிய காலம் தான் கேரியர் என்பதால் ஒரே நேரத்தில் எல்லா மொழிகளிலும் நடிக்கிறார்கள். தமிழ் இரண்டாம் பட்சம் தான். நயந்தாராவே சொந்த மொழியான மலையாளத்தில் 50 லட்சம் சம்பளத்தில் நடிப்பவர், தமிழில் நடிக்க 4 கோடி வரை கேட்கிறார்.
தமிழ் ஒரு மொழியில் நடிப்பதைவிட தெலுங்கிலும் நடித்தால் கூடுதல் சம்பளம் கிடைக்கிறது. தமிழ் சினிமாவில் விஜயகாந்த் மட்டும் தான் தமிழில் மட்டும் தான் நடிப்பேன் என்ற பிடிவாதத்துடன் இருந்தவர். சம்பளம் அதிகம் கிடைப்பதால் தெலுங்குக்கும் சேர்த்தே துண்டு போடுகிறார்கள் தமிழ் ஹீரோக்கள்.