Advertisement

சிறப்புச்செய்திகள்

கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஒரு பாடலுக்கு நடனமாடிய முன்னணி கதாநாயகிகள் : யார் நடனம் அசத்தல்?

16 ஜூலை, 2025 - 10:52 IST
எழுத்தின் அளவு:
Leading-heroines-who-danced-to-a-song-Who-danced-the-best

தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடிகைகள் மட்டுமே நடனமாடுவார்கள். ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி என அந்தப் பாடல்கள் மூலம் பிரபலமான நடிகைகள் பலர் இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அதிக கவர்ச்சி காட்டாமல் கொஞ்சம் கிளாமருடன் அப்படியான பாடல்களுக்கு முன்னணி கதாநாயகிகளும் ஆட ஆரம்பித்தார்கள். இன்றைய இளம் சினிமா ரசிகர்களுக்காக, கடந்த 30 வருடங்களில் அப்படி ஒரு பாடலுக்கு நடனமாடிய சில முன்னணி கதாநாயகிகளையும், அவர்களின் முக்கிய பாடல்களையும் பற்றிப் பார்ப்போம்.

கவுதமி - சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு…



ஷங்கர் இயக்கத்தில் 1993ல் வெளிவந்த முதல் படமான 'ஜென்டில்மேன்' படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் இடம் பெற்ற பாடல் 'சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு'. அப்பாடலுக்கு அப்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்த கவுதமி, பிரபுதேவாவுடன் இணைந்து நடனமாடினார். அந்தக் கால இளைஞர்கள் மத்தியில் அப்பாடலுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அப்போது சிறுவனாக இருந்த ஜிவி பிரகாஷ்குமார் அப்பாடலின் துவக்கத்தில் பாடியிருப்பார்.

ரோஜா - தங்க நிறத்துக்குத்தான்…



எஸ்ஏ சந்திரசேகரன் இயக்கத்தில், விஜய், இஷா கோபிகர் மற்றும் பலர் நடிப்பில் 1999ல் வெளிவந்த திரைப்படம் 'நெஞ்சினிலே'. அப்படத்தில் தேவா இசையில் விஜய், ஸ்வர்ணலதா பாடிய 'தங்க நிறத்துக்குத்தான்' என்ற பாடலுக்கு ரோஜா நடனமாடினார். 90 காலகட்டங்களில் ஒவ்வொரு படத்திலும் இப்படியான ஒரு கவர்ச்சிப் பாடல் கண்டிப்பாக இருக்கும். அப்போது கதாநாயகியாக இறங்கு முகத்தில் இருந்த ரோஜா, கிளாமர் ஆடையில் ஒரு குத்தாட்டம் போட்டிருப்பார். அதேப்போல் பிரசாந்த்தின் ‛காதல் கவிதை' படத்தில் ராஜு சுந்தரம் மாஸ்டர் உடன் ‛ஆளானா நாள் முதலா...' பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார்.

ஷில்பா ஷெட்டி - மெக்கரீனா…



எஸ்ஜே சூர்யா இயக்கத்தில், விஜய், ஜோதிகா மற்றும் பலர் நடிப்பில் 2000ம் ஆண்டு வெளிவந்த படம் குஷி. அப்படத்தில் தேவா இசையில் அனைத்துப் பாடல்களுமே ஹிட்டானவை. ஒரே படத்தில் இரண்டு முன்னணி நடிகைகளை ஒரே ஒரு பாடலுக்கு தனித் தனியாக நடனமாட வைத்திருந்தார் இயக்குனர். ஹிந்தியில் அப்போது பிரபலமாக இருந்த, அதற்கு முன்பு தமிழில் பிரபுதேவா நடித்த 'மிஸ்டர் ரோமியோ' படத்தில் கதாநாயகியாக நடித்த ஷில்பா ஷெட்டி, அப்படத்தில் இடம் பெற்ற 'மெக்கரீனா' பாடலுக்கு வெஸ்டர்ன் நடனத்தில் அசத்தி இருந்தார்.

மும்தாஜ் - கட்டிப்புடி கட்டிப்புடிடா…



மேலே குறிப்பிட்ட, அதே 'குஷி' படத்தில் விஜய்யுடன் சேர்ந்து 'கட்டிப்புடி கட்டிப்புடா' என்ற பாடலுக்கு கெட்ட ஆட்டம் ஆடியிருந்தார் மும்தாஜ். பாடலும் சரி, நடனமும் சரி 'ஏ' சர்டிபிகேட் கொடுக்கும் அளவிலான பாடலாகத்தான் இருந்தது. இந்தக் காலத்தில் அப்படியான பாடல் வந்தால் எத்தனை 'கட்' கள் வந்திருக்குமோ தெரியாது.

சிம்ரன் - ஆள்தோட்ட பூபதி நானடா…



வின்சென்ட் செல்வா இயக்கத்தில், விஜய் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'யூத்'. விஜய் படங்கள் என்றாலே அந்தப் படங்களில் பாடல்கள் சிறப்பாக இருக்கும் என்பது வழக்கம். நடனப் பாடல்கள் என்றால் விஜய்யின் நடனம் தனி ரகம். அந்தப் படத்தில் மணிசர்மா இசையில் இடம் பெற்ற 'ஆள்தோட்ட பூபதி' பாடலுக்கு சிம்ரன் நடனமாடி இருந்தார். இருவரது நடனமும் ஏட்டிக்குப் போட்டியாக அமைந்து ஒரு ரகளை செய்தது. இப்போது கூட அந்தப் பாடல் வந்தால் ஆடாமல் இருக்க முடியாது என்று தாராளமாகச் சொல்லலாம். அதேப்போல் ‛எதிரும் புதிரும்' படத்தில் ராஜு சுந்தரம் மாஸ்டர் உடன் இணைந்து ‛தொட்டு தொட்டு பேசும் சுல்தானா...' பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார் சிம்ரன். இந்தப்பாடல் தான் சமீபத்தில் அஜித்தின் ‛குட் பேட் அக்லி' படத்தில் மீண்டும் இடம் பெற்று டிரெண்ட் ஆனது.

மீனா - சரக்கு வச்சிருக்கேன்…



ரவி இயக்கத்தில், விஜய், ரிச்சா பலோட் மற்றும் பலர் நடிப்பில் 2001ல் வெளிவந்த படம் 'ஷாஜகான்'. அப்படத்தில் 'சரக்கு வச்சிருக்கேன்' என்ற பாடலுக்கு மீனா நடனமாடி இருந்தார். விஜய், மீனா இருவரும் ஏறக்குறைய சமகாலத்தில் வளர்ந்தவர்கள். ஆனால், மீனா, சீனியர் நடிகர்களுடனே ஜோடியாக நடித்ததால் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தின் பாடலில் இருவரது நடனமும் ஒரு அசைவ பிரியாணி சாப்பிட்ட திருப்தியை ரசிகர்களுக்குக் கொடுத்தது.

நக்மா - வத்திக்குச்சி பத்திக்காதுடா…



ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளியான அவரது முதல் படம் 'தீனா'. யுவன் ஷங்கர் ராஜவின் இசையில் அப்படத்தில் இடம் பெற்ற 'வத்திக்குச்சி பத்திக்காதுடா' பாடலுக்கு நக்மா நடனமாடி இருந்தார். அஜித்தை 'தல' என அழைக்க ஆரம்பித்த படம். பாடலின் துவக்கத்தில் 'தல இருக்கும் போது வாலு ஆடக்கூடாதுடா,' என்ற வசனத்துடன் பாடல் ஆரம்பமாகும். அது இன்று வரை பிரபலம். நக்மா சிறப்பாக நடனமாடி இருந்தாலும் அது தனியாகப் பேசப்படாததான் காரணம் ஆச்சரியம்தான்.

ரீமா சென் - மே மாதம் 98ல்…



சரண் இயக்கத்தில், மாதவன், பூஜா, அமோகா மற்றும் பலர் நடிப்பில் 2003ல் வெளிவந்த படம் 'ஜே ஜே'. அப்படத்தில் 'மின்னலே, பகவதி, தூள்' படங்களின் கதாநாயகியான ரீமா சென், பரத்வாஜ் இசையில் இடம் பெற்ற 'மே மாசம் 98ல் மேஜர் ஆனேனே' என்ற ஒரு பாடலுக்கு நடனமாடினார். பாடல் வரிகளில் இரட்டை அர்த்த வசனங்கள் இருந்ததாலும் ரீமாவின் கிளுகிளுப்பான நடனம் கவர்ச்சிகரமாகவே இருந்தது.

மாளவிகா - வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்…



மிஷ்கின் இயக்கத்தில், நரேன், பாவனா மற்றும் பலர் நடிப்பில் 2006ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'சித்திரம் பேசுதடி'. அப்படத்தில் சுந்தர் சி பாபு இசையில், கானா உலகநாதன் பாடிய 'வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்' பாடலுக்காக மாளவிகா நடனமாடினார். மஞ்சள் புடவை அணிந்து அவர் ஆடிய ஆட்டம் அவ்வளவு வசீகரமாக இருந்தது. அதன்பின் மிஷ்கின் படங்களில் மஞ்சள் புடவை அணிந்த நடன மங்கையின் நடனம் என்பது பிரபலமாகப் பேசப்பட்டது.

நயன்தாரா - கோடம்பாக்கம் ஏரியா..



பேரரசு இயக்கத்தில், விஜய், அசின் மற்றும் பலர் நடிப்பில் 2005ல் வெளிவந்த திரைப்படம் 'சிவகாசி'. அப்படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில் 'கோடம்பாக்கம் ஏரியா' பாடலுக்கு நயன்தாரா நடனமாடி இருந்தார். அப்போதுதான் முன்னணி கதாநாயகியாக நயன்தாரா உயர்ந்து வந்தார். இருந்தாலும் விஜய் படம் என்பதால் நடனமாட சம்மதித்தார். அப்போதைக்கு ஹிட்டான பாடலாக மட்டும் இருந்தது.

ரம்யா கிருஷ்ணன் - தூது வருமா…



கவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா, ஜோதிகா நடிப்பில் 2003ல் வெளிவந்த திரைப்படம் 'காக்க காக்க'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தில் இடம் பெற்ற 'தூது வருமா' பாடலுக்கு ரம்யா கிருஷ்ணன் நடனமாடினார். வெஸ்டர்ன் ஸ்டைல் பாடல், அரங்கம், ரம்யாவின் ஆடை என அந்தப் பாடல் ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. அதேப்போல், ‛குத்து' படத்தில் சிம்பு உடன் இணைந்து ‛போட்டு தாக்கு...' என்ற பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டிருந்தார் ரம்யா கிருஷ்ணன். மேலும் ‛ரிதம்' படத்திலும் ‛அய்யோ பத்திக்கிச்சு' பாடலுக்கும் நடனம் ஆடியிருந்தார் ரம்யா கிருஷ்ணன்.

நயன்தாரா - பல்லேலக்கா…




ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஸ்ரேயா நடிப்பில் 2007ல் வெளிவந்த படம் 'சிவாஜி'. அப்படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் இடம் பெற்ற 'பல்லேலக்கா' என்ற பாடலுக்கு நயன்தாரா நடனமாடி இருந்தார். ரஜினிகாந்த் ஜோடியாக 'சந்திரமுகி' படத்தில் நடித்த நயன்தாரா அப்போது டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தார். இருந்தாலும் ஷங்கர் படம், ரஜினியுடன் பாடல் என்பதால் அதில் நடிக்க சம்மதித்தார். படம் வந்த சமயத்தில் ஹிட் பாடல்களில் ஒன்றாக இருந்தது. அதேபோல் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த எதிர்நீச்சல் படத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன் உடன் இணைந்து சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல...' பாடலுக்கும் ஆட்டம் போட்டிருந்தார் நயன்தாரா.

குஷ்பு - ஹே ராமா ராமா…



பிரபுதேவா இயக்கத்தில், விஜய், நயன்தாரா நடிப்பில் 2009ல் வெளிவந்த திரைப்படம் 'வில்லு'. அப்படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் 'ஹே ராமா ராமா' என்ற பாடலுக்கு குஷ்பு நடனமாடினார். 90களில் டாப் நடிகைகளில் ஒருவரான குஷ்பு திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டு வந்தார். ஓரிரு படங்களில் மட்டுமே சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். 'வில்லு' படத்தில் அவர் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து அதே வேகத்துடன் நடனமாடி இருப்பார்.

கஸ்தூரி - குத்து விளக்கு…



சிஎஸ் அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே மற்றும் பலர் நடிப்பில் 2010ல் வெளிவந்த திரைப்படம் 'தமிழ் படம்'. அப்படத்தில் கண்ணன் இசையில் இடம் பெற்ற 'குத்து விளக்கு' பாடலுக்கு கஸ்தூரி நடனமாடி இருந்தார். கவர்ச்சி வகை நடனம் என்றுதான் சொல்ல வேண்டும். படம் வெளிவந்த சமயத்தில் அப்பாடலுக்கென தனி ரசிகர் கூட்டம் இருந்தது. இப்போதும் கூடி அப்பாடலைப் பற்றிப் பேசுபவர்கள் உண்டு.

தமன்னா - காவாலய்யா…



நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் 2023ல் வெளிவந்த திரைப்படம் 'ஜெயிலர்'. அப்படத்தில் அனிருத் இசையில் 'காவாலய்யா' என்ற பாடலுக்கு தமன்னா நடனமாடினார். ரஜினி படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை நடனமாடியது ஆச்சரியமான ஒன்று. தமன்னா பற்றி ரஜினி பேசியதும் வைரலானது. பாடலும் அதிரடியாக இருந்ததால் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது.

பூஜா ஹெக்டே - மோனிகா...



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன் மற்றும் சில முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க அடுத்த மாதம் வெளியாக உள்ள படம் 'கூலி'. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'மோனிகா' பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடி உள்ளார். சில தினங்களுக்கு முன்பு இப்பாடல் வெளியானது. பூஜாவின் நடனம், 'ஜெயிலர்' படத்தில் தமன்னாவின் நடனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. இரண்டில் எது ஒன்றை ஒன்று மிஞ்சப் போகிறது என்பது இந்தப் படம் வந்த பிறகுதான் தெரியும்.

ஒரே ஒரு பாடலுக்கு முன்னணி நடிகைகள் நடனம் என்பது படத்தை இன்னும் கூடுதலாக விளம்பரப்படுத்தும் ஒரு நோக்கம்தான். தங்களது படங்களில் இது போன்று ஒரு சிறப்பு இருந்தால் அது ரசிகர்களை இன்னும் ஈர்க்கும் என்பதும் ஒரு காரணம். இப்படியான பாடல்களுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. சில பாடல்கள் பல வருடங்கள் கடந்தும் பேசப்படும், சில பாடல்கள் அப்போதைக்கு பேசப்படும்.

மேலே நாம் குறிப்பிட்ட பாடல்களில் உங்களைக் கவர்ந்த சில பாடல்களும் இருந்திருக்கும். எது உங்களுக்குப் பிடித்தது என்று கமெண்ட்டில் சொல்லுங்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2025ன் அரையாண்டில் தமிழ் சினிமா வசூல் எவ்வளவு?2025ன் அரையாண்டில் தமிழ் சினிமா வசூல் ... மேக்கப் குறித்து சரோஜாதேவி சொன்னது: இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் புதுதகவல் மேக்கப் குறித்து சரோஜாதேவி சொன்னது: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in