ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி ராக்ஸ்டார். இசைத்துறையில் ஏற்கனவே சாதித்த சாதனையாளர்கள் போட்டியிடும் நிகழ்ச்சி. பல்வேறு சுற்றுகளாக நடந்த இந்த போட்டியின் இறுதி சுற்றுக்கு சத்யன், மகாலிங்கம், பிரியா ஹேமேஷ், ராகுல் நம்பியார் மற்றும் ரஞ்சித் ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் பிரபல இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், முதன் முறையாக நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்தார். அவர் தவிர பாடகர்கள் மனோ மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் இடம் பெற்று இருந்தனர். இதன் இறுதிசுற்று போட்டி சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி நாளை (ஞாயிறு 26 செப்டம்பர்) அன்று மாலை 6.30 மணிக்கு மூன்று மணி நேர சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பாக இருக்கிறது.