ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

அர்ச்சனா ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தார். இதனையடுத்து சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வர விஜய் டிவியில் பொன் மகள் வந்தாள் என்ற தொடரில் முதலில் நடித்தார். அதன் பின் மீண்டும் டிவியிலேயே சமீபத்தில் நிறைவுற்ற ஹிட் தொடரான ஈரமான ரோஜாவே தொடரில் தேன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். தற்போது இவர் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது வெப்சீரிஸ் ஒன்றிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.
'இதழும் இதழும் இணையட்டுமே' என்கிற வெப் சீரிஸில் அர்ச்சனா தற்போது நடித்து வருகிறார். காதல், காமெடி கலந்து இளைஞர்களை கவரும் கதையாக உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸின் முதல் எபிசோடு சமீபத்தில் யூ-டியூபில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. இந்த வெப்சீரிஸ் ஏழு அத்தியாயங்களாக வெளிவர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.




