ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

விஜய் டிவி சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான சிவாங்கியை, குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. இவரது குறும்புத்தனமான செயல்களுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே ரசிகர்களாக உள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போது அதிகமாக டிரெண்டிங் ஆன சின்னத்திரை பிரபலங்களில் சிவாங்கியும் முக்கிய நபராக இருந்தார்.
இதனால் 2021ம் ஆண்டு நடந்த ப்ளாக் ஷீப் டிஜிட்டல் விருது நிகழ்ச்சியில் 'சிறந்த பெண் பொழுதுபோக்கு நட்சத்திரம்' விருதும், பிஹைண்ட் வுட்ஸ் கோல்டு ஐகான் நிகழ்ச்சியில் 'தொலைக்காட்சியில் பிரபலமான பெண் நட்சத்திரத்திரம்' விருதும், விஜய் டிவியில் 'தொலைக்காட்சியில் பிரபலமான ஜோடிகள்' (அஸ்வின் - சிவாங்கி) விருதும் சிவாங்கிக்கு கிடைத்தது.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இன்ஸ்டாவில் 1 மில்லியன் பாலோவர்களை நெருங்கிய சிவாங்கி தற்போது 4 மில்லியன் பாலோவர்களை பெற்றுள்ளார். இந்த மகிழ்ச்சியான நிகழ்வை கேக் வெட்டி கொண்டாடி தனது ரசிகர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.




