6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கும் ‛கும்பலாங்கி நைட்ஸ்' இயக்குனர் | சினிமா இயக்குனரைக் காதலிக்கிறாரா சமந்தா? | என் அரசியல் பார்வையை பாராட்டிய கமல்! - ஜி.வி. பிரகாஷ் | விஜய்யின் ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் எப்போது ரிலீஸ்? | ‛ரெட்ரோ' படத்தில் சூர்யா - ஸ்ரேயா நடன பாடல் காதலர் தினத்தில் ரிலீஸ்! | நானியுடன் மூன்றாவது முறையாக இணைந்த அனிருத்! | நீ லெஸ்பியனா? ஜாக்குலின் அதிரடி பதில் | பேட் கேர்ள் டீசருக்கு தொடரும் கண்டனம்: படத்தை தடை செய்யுமாறு புகார் | ரம்யா பாண்டியன் சகோதரர் திருமணம்: காதலியை கரம் பிடித்தார்; வைரலாகும் போட்டோ | ‛சித்தா' இயக்குனர் அருண்குமார் திருமணம்: பிரபலங்கள் நேரில் வாழ்த்து |
உலகளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான ‛சர்வைவர் நிகழ்ச்சி முதன்முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. செப்., 12 முதல் ஆரம்பமான இந்த நிகழ்ச்சி தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் அர்ஜூன் முதன் முறையாக இந்நிகழ்ச்சி மூலம் டிவியில் தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார். ஆப்பிரிக்காவில் உள்ள ஜான்சிபர் தீவில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த சர்வைவர் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். விக்ராந்த், உமாபதி ராமைய்யா, நந்தா, பெசன்ட் ரவி, நடிகைகள் விஜயலட்சுமி, சிருஷ்டி டாங்கே, காயத்ரி ரெட்டி, விஜே பார்வதி ஆகிய 8 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளதாக முன்னரே அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள 10 போட்டியாளர்களில் 8 போட்டியாளர்கள் விபரம் கடந்த ஞாயிறு அன்று போட்டியின் துவக்க நிகழ்ச்சியின் போது அறிவிக்கப்பட்டனர்.
அதன்படி நடிகர் ரோபோ ஷங்கரின் மகளும், பிகில் படத்தில் நடித்தவருமான இந்திரஜா, ‛வடசென்னை, நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சரண் சக்தி, நடிகை லக்ஷமி ப்ரியா, நடிகர் ராம் சி, நடிகர் லக்கி நாராயணன், விளையாட்டு வீராங்கனை ஐஸ்வர்யா கிருஷ்ணன், சிங்கப்பூரை சேர்ந்த பாடகி லேடி காஷ், நடிகர் அம்ஜத் கான் என மொத்தம் 16 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர். இன்னும் இரண்டு பேர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் களமிறங்க உள்ளனர்.