நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷியாம். சினிமா மீது தீராத காதல் கொண்ட இவர் நடிக்க வேண்டும் என்ற கனவோடு கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு வந்தார். பல இடங்களில் வாய்ப்புக் கேட்டு அலைந்த ஷியாமுக்கு மிஞ்சியதெல்லாம் ஏமாற்றம் தான். இதற்கிடையில் அவர் பார்ப்பதற்கு ஹிந்தி நடிகர் போல் இருப்பதால் பாலிவுட்டில் முயற்சி செய்ய சொல்லி நண்பர்கள் அறிவுறுத்த, மும்பைக்கும் சென்றார் ஷியாம். ஆனால் அங்கும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதன்பின் மீண்டும் சென்னை திரும்பிய ஷியாமுக்கு சின்னத்திரையில் புதுக்கவிதை என்கிற விஜய் டிவி சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட அவர் தொடர்ந்து விஜய் டிவியில் களத்து வீடு, கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி கல்யாணம், நெஞ்சம் மறப்பதில்லை, கண்ணம்மா, அரண்மனை கிளி, என பல சீரியல்களில் நடித்து வந்தார்.
டான்ஸ் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் விட்டு வைக்காத ஷ்யாம் தனக்கு கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி தனக்கான இடத்தை உருவாக்கினார். இப்படியான ஒரு காலக்கட்டத்தில் தான் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனை ஒரு காபி ஷாப்பில் சந்திக்கும் வாய்ப்பு ஷியாமுக்கு கிடைத்தது. அவரை சந்தித்து பேசி தனது சினிமா குறித்த காதலையும் தனது சின்னத்திரை பயணத்தையும் கூறியுள்ளார்.
அதைக் கேட்டு கவுதம் மேனன் 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தில் ஷியாமுக்கு வாய்ப்பளித்தார். தமிழில் சிம்புவுக்கும் தெலுங்கு வெர்ஷனில் நாக சைதன்யாவுக்கும் ஷ்யாம் நண்பராக நடித்திருந்தார். தனது வெள்ளித்திரை கனவை தீராத ஓட்டத்தால் எட்டிப்பிடித்த ஷியாம் அடுத்த நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார். திரையுலகில் சாதித்தது போலவே நிஜ வாழ்விலும் தனது நீண்ட நாள் காதலியை போராடி கைப்பிடித்து ஜெயித்துக் காட்டியுள்ளார். விரைவில் அவர் வெள்ளித்திரையில் அடுத்த படத்தில் கமிட்டாக அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.