ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்த அஸ்வினுக்கு, அவர் எதிர்பார்த்தபடியே பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சமீபத்தில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாமான அஸ்வின், நானி தயாரிக்கும் மீட் க்யூட் என்ற புதிய ஆந்தாலஜி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதில் சுனைனா, அதா சர்மா, அகன்ஷா சிங், ருஹானி சர்மா, சஞ்சிதா பூனாச்சா மற்றும் வர்ஷா பொல்லம்மா என ஆறு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் மார்க்கெட்டில் ரவுடி போல் சிவப்பு சட்டை, லுங்கி அணிந்து பார்ப்பதற்கு தாடியுடன் ராவாக இருக்கும் புகைப்படங்களை அஸ்வின் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் கேப்ஷனாக 'எதையும் எதிர்கொள்வேன் என்ற மனநிலை மட்டுமே நம்பிக்கையை கொடுக்கும்' என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றன.