இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் முன்னதாக நடித்த ஜெனிபருக்கு பதிலாக பிக்பாஸ் ரேஷ்மா நடித்து வருகிறார்.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலெட்சுமி. பாக்கியலெட்சிமி - கோபி - ராதிகா என முக்கோனமாக நகரும் விறுவிறு திரைக்கதை ரசிகர்களிடையே நல்ல ஹிட் அடித்துள்ளது. இதில் முக்கிய கதபாத்திரமான ராதிகா கதாபாத்திரத்தில் நடிகை ஜெனிபர் நடித்து வந்தார். தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்த ஜெனிபர் திடீரென பாக்கியலெட்சுமி சீரியலில் இருந்து விலகினார்.
எனவே, அதற்கு பதிலாக ராதிகா கதாபாத்திரத்தில் பிக்பாஸ் பிரபலம் ரேஷ்மா நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடிப்பது போன்ற ப்ரோமா வெளியானது. அதைபார்த்த ரசிகர்கள் ராதிகா கதாபாத்திரத்தில் இவரா என அதிருப்திகளை வெளிப்படுத்தினர். ஆனால், திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வரும் ரேஷ்மா ரசிகர்களின் அதிருப்தியை பாஸிட்டிவாக மாற்றி பாராட்டுகளை பெற்று வருகிறார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளிவந்த ரேஷ்மா, மீண்டும் பழைய பார்முக்கு திரும்பி மற்றுமொரு டிவியில் அன்பே வா சீரியலிலும், விஜய் டிவி பாக்கியலெட்சுமி சீரியலிலும் நடித்து வருகிறார்.