மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
சின்னத்திரை பிரபலமான மா கா பா ஆனந்த நல்ல கலைஞன் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பதை அவருடன் பழக வாய்ப்பு கிடைத்த அனைவருமே கூறியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியில் சிறந்த ஆண் தொகுப்பாளருக்கான விருதை மா கா பா பெற்றார்.
அப்போது விஜய் டிவி சேனல் ஹெட் விருதை வழங்கிவிட்டு, மா கா பா வை பற்றி பேசும் போது, எப்போதுமே தன்னை பிஸியாக வைத்திருக்கும் மா கா பா சரியான நேரத்திற்கு சாப்பிடுவதில்லை. இது அவரது உடல்நலனுக்கு நல்லதல்ல என்ற தகவலை வருத்தத்துடன் பதிவு செய்தார்.
உதவும் குணம் கொண்ட மா கா பா பல சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு தன்னை எப்போதுமே பிஸியாக வைத்திருக்கிறார். பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சென்னையில் உணவின்றி தவிக்கும் பல ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் முயற்சியையும் செய்து வருகிறார். சமூகப்பணிகளை செய்வதோடு மட்டுமல்லாமல் அதை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தன்னை போலவே பணி செய்யும் மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார். இதுபோல பல நற்பணிகளை செய்து வரும் மா கா பா வேலை மற்றும் சமூகப்பணிகள் இடையே தன்னை கவனித்துக் கொள்வதில்லை என அவரது நண்பர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.