மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தேன்மொழி பி.ஏ., சீரியலில் ஜாக்குலினுக்கு அப்பாவாக நடித்த வந்த குட்டி ரமேஷ், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் மாரடைப்பால் இறந்து விட்டார். அவரது மறைவு சின்னத்திரை உலக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேன்மொழி பி.ஏ சீரியல் நாயகியான ஜாக்குலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‛‛அப்பா குட்டி ரமேஷின் இறப்பு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. நல்ல மனிதராகவும், அப்பாவாகவும் இருந்த நீங்கள் இல்லாதது வருத்தமாக உள்ளது. உங்களை நான் மிஸ் செய்வேன். எனக்கும், அப்பாக்களுக்கும் ராசியே இல்லை என்று மிகுந்த மனவேதனையுடன் செய்தி வெளியிட்டுள்ளார் ஜாக்குலின்.
அதேப்போல் குட்டி ரமேஷின் மற்றொரு மகளாக நடித்துள்ள கம்பம் மீனாவும் இன்ஸ்டாகிராமில் ஒரு செய்தி பதிவிட்டுள்ளார். அதில், அய்யோ கடவுளே என்ன கொடுமை இது. ரமேஷ் சார் எப்பவுமே சுறுசுறுப்பாக கலகலப்பாக இருப்பீங்களே. நீங்க சரியாகி வந்திருவீங்கன்னு முழு நம்பிக்கையோடு இருந்தோமே. மீனாம்மா வாங்க டிக்டாக் பண்ணலாம், பேஸ்புக்குல போடுங்க, இன்ஸ்டால போடுங்கனு சொல்வீங்களே ரமேஷ் சார். எத்தனை லைக் வந்துருக்கு, என்னென்ன கமெண்ட் வந்திருக்குன்னு கேட்பீங்களே சார். உங்க ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் சார் என்று அவருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப் படத்துடன் தெரிவித்துள்ளார் கம்பம் மீனா.