பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பிரியங்காவிற்கு 2016ல் பிரவீன் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் சில ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்தனர். அதன்பின் தனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி மக்களை என்டர்டெயின் செய்து வந்தார்.



இந்நிலையில் பிரியங்கா திடீரென 2வது திருமணம் செய்துள்ளார். நேற்று 16ம் தேதி இந்த திருமணம் நடந்துள்ளது. அதுதொடர்பான போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா. இவர் திருமணம் செய்த நபரின் பெயர் வசி. இவர் பிரபல டி.ஜே., வாக உள்ளார். சொந்தமாக ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமும் நடத்தி வருகிறார். பல ஸ்டார் ஹோட்டல்கள், கிளப் மற்றும் விஐபி.,க்களின் திருமண நிகழ்வுகளில் இவர் பாடல் கச்சேரிகளை செய்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் பார்டி ஒன்றில் டீஜே., வசி உடன் பிரியங்காவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் இருவரும் காதலிக்க தொடங்கினர். இப்போது இருவீட்டாரது சம்மதத்துடன் இவர்கள் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் கொஞ்சம் கிராண்ட்டாக, அதேசமயம் நெருங்கி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள சென்னையில் நடந்துள்ளது.
திருமணமான பிரியங்கா - வசிக்கு சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.