காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் |
பிரபல சின்னத்திரை நடிகர் பழனியப்பன் லொள்ளு சபா காலம் முதலே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்களில் பயணித்து வருகிறார். தற்போது 'சிறகடிக்க ஆசை' தொடரில் இவர் நடித்து வரும் செல்வம் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பழனியப்பன் ஒரு விருது நிகழ்வில் கலந்து கொண்ட போது தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து ஓப்பனாக பதிவிட்டுள்ளார்.
அதாவது, பழனியப்பனுக்கு அண்மையில் ஒரு தனியார் நிகழ்ச்சி நிறுவனம் விருது ஒன்றை வழங்கியுள்ளது. ஆனால், விருது வழங்கியவர்களுக்கோ பழனியப்பன் யார்? அவர் எந்த தொடரில் நடிக்கிறார்? எதற்காக அவருக்கு விருது கொடுக்கப்படுகிறது என எதையும் தெரியாமல் பெயருக்கு அழைத்து விருது கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் கூறியுள்ள பழனியப்பன், 'கலைஞர்களை கூப்பிட்டு அவமதிக்காதீர்கள்' என காட்டமாக தனது வேதனையை பதிவு செய்துள்ளார். யார் என்ன அவார்டு கொடுத்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு பெருமை பீத்தும் சில நடிகர்களுக்கு மத்தியில் ஒரு கலைஞனுக்கு விருது என்பது எப்பேற்பட்ட அங்கீகாரம் என்பதை பழனியப்பன் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.