லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சின்னத்திரை இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர்களில் ஒன்று 'மகாநதி'. இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் லெட்சுமி பிரியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் லெட்சுமி பிரியாவின் பிறந்தநாளை சக நடிகர்களான சாதிகாவும் ருத்ரன் பிரவீனும் வீட்டிற்கே சென்று சர்ப்ரைஸாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களும் லெட்சுமி பிரியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.