லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'விக்ரம் வேதா' தொடரில் ஹீரோயினாக நடித்தவர் அஷ்வதி. சின்னத்திரையில் அறிமுகமான சில நாட்களிலேயே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள இவர் தற்போது 'மலர்' தொடரில் நடித்து வருகிறார். இவர் அண்மையில் தனது கணவருடன் ரொமாண்டிக்காக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைபார்க்கும் பலரும் அஷ்வதியிடம் யார் அது? காதலரா? என கேட்டு வந்தனர். விவரம் தெரிந்தவர்கள் அது அஷ்வதியின் கணவர் என்று சொல்ல பல ரசிகர்கள் அஷ்வதிக்கு திருமணமாகிவிட்டதா? என அதிர்ச்சியடைந்துள்ளனர்.