நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
'வாணி ராணி, அழகு' ஆகிய தொடர்களின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் சாரா என்கிற ஜெனிபர் பிரியா. சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மன்னர் வகையறா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு பெரிதளவில் நடிப்பின் பக்கம் கவனம் செலுத்தாத சாரா, மேக்கப் ஆர்டிஸ்டாக பல சின்னத்திரை பிரபலங்களை அலங்கரித்துள்ளார். இவரது இரண்டாவது மேக்கப் ஸ்டூடியோவை நடிகர் விஜய் சேதுபதி தான் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த துநேசன் என்பவரை சாரா திருமணம் செய்ய உள்ளார். துநேசன் சிங்கப்பூரில் பைலட்டாக வேலை பார்ப்பதோடு அங்கேயே குடியுரிமையும் வைத்துள்ளார். எனவே, திருமணத்திற்கு பிறகு சாரா தனது மேக்கப் அகாடமியை சிங்கப்பூரிலேயே தொடரவுள்ளார். மேலும், சின்னத்திரையில் மேக்கப், நடிப்பு என எந்த வாய்ப்பு வந்தாலும் தமிழகத்திற்கு வந்து செல்லவும் முழு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறாராம்.