சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் |
நடிகர் ஸ்ரீகுமார் தான் நடிக்கும் சீரியல்களில் மிகவும் டெடிகேஷனுடன் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளுக்காக அதிக ரிஸ்க் எடுத்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தற்போது தன்னுடன் நடிக்கும் சக நடிகையையும் ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சியில் நடிக்க வைத்துள்ளார். வானத்தைப் போல சீரியலில் ஸ்ரீகுமார், சாந்தினி இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர். அந்த சீரியலின் ஒரு காட்சியில் சாந்தினியும், ஸ்ரீகுமாரும் பைக்கிலிருந்து கீழே விழுவது போல் படமாக்கப்பட்டுள்ளது. அதற்காக இருவரும் உண்மையாகவே பைக்கிலிருந்து கீழே விழுந்து ஸ்டன்ட் செய்துள்ளனர். அந்த ரிஸ்க்கான ஸ்டண்டை ஸ்ரீகுமார் தனது இண்ஸ்டாகிராமில் வெளியிட ரசிகர்கள் இருவரையும் பாராட்டி வருகின்றனர்.