ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சின்னத்திரை நடிகை தீபா அண்மையில் இயக்குனர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ப்ரியமான தோழி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து வரும் தீபா, தனது கடந்தகால வாழ்வின் கசப்பான அனுபவங்களை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில், 'நான் 14 வயதிருக்கும் போது சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன். தப்பான நபரை 16 வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அது மிகவும் தவறாக அமைந்தது. அப்போதெல்லாம் ரேஷனில் அரிசி வாங்கி சாப்பிடுவதற்கு கூட கஷ்டப்பட்டேன். திருமணத்திற்கு பிறகு தான் முதல் கணவரின் சுயரூபம் தெரிந்தது. குழந்தையை பெற்றெடுத்த பின் பிழைக்க வழியில்லாமல் குழந்தையை 'அத்திப்பூக்கள்' சீரியலில் நடிக்க வைத்து அந்த காசை வைத்து சாப்பிட்டோம். குழந்தைக்கு 4 வயதாகும் போது தான் நான் மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன். அதிலும் குழந்தையை ஹாஸ்டலில் விட்டு செல்லும் போதெல்லாம் நான் யாருடனோ ஊர் சுற்றுகிறேன் என்றெல்லாம் சொல்வார்கள்' என்று மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.