ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிரபல சின்னத்திரை நடிகரான ஸ்ரீகுமார் 'வானத்தைப்போல' தொடரில் நடித்து வருகிறார். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் ஆரம்பகாலக்கட்டத்தில் அலட்சியத்தால் தான் பல சினிமா வாய்ப்புகளை இழந்ததாக கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் ‛பெரியண்ணா படத்தில் முதலில் நடிக்க விஜயகாந்த் என்னை தான் செலக்ட் செய்திருந்தார். ஆனால், அப்போது விஜய், சூர்யாவை சிபாரிசு செய்தார். ஆரம்ப காலக்கட்டத்தில் நானும் சூர்யாவும் ஒரே டான்ஸ் க்ளாஸில் ஆடியிருக்கிறோம். சூர்யாவுக்கு நிறையவே திறமைகள் இருந்தது. எனவே, இறுதியில் அவருக்கு அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. என் அப்பா என்னிடம் டான்ஸ் கத்துக்கோ, பைட் கத்துக்கோ என்று அடிக்கடி சொல்வார். ஆனால், அப்போதெல்லாம் நான் அசால்ட்டாக இருந்துவிட்டேன். அதனாலேயே பல வாய்ப்புகளை நான் இழந்துவிட்டேன்' என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.