லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நடத்திர தொடர் பாக்யலட்சுமி. 900 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. கே.எஸ்.சுஷித்ரா ஷெட்டி, சதீஷ் குமார், நந்திதா ஜெனிபர், ரஞ்சித் உள்பட பலர் நடிக்கிறார்கள். சிவ சேகர், டேவிட் இயக்குகிறார்கள். இந்த தொடரில் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார் சித்தார்த். அவர் நடித்துள்ள 'சித்தா' படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் புரமோசன் நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த தொடரில் அவர் நடிகர் சித்தார்த்தாகவே வருவதாக கூறப்படுகிறது. அவர் நடித்த காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டது. அடுத்தடுத்த எபிசோட்களில் சித்தார்த் நடித்த காட்சிகள் இடம் பெறும் என்று சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.