ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகை வனிதா விஜயகுமார் சினிமாவில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்து பிசியாக நடித்து கொண்டு வருகிறார். அவர் தற்போது சினிமாவில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது குறித்து சர்ச்சையான கருத்தினை கூறியுள்ளார். அதாவது, 'சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு. நடிகர்கள் படத்தில் புகைப்பிடித்தால் வரவேற்கிறோம். ஆனால், அதையே நடிகைகள் செய்தால் சர்ச்சையாகி விடுகிறது. நடிகைகள் திரையில் புகைப்பிடிப்பதாலேயே நிஜத்திலும் செய்வார்கள் என்று சொல்ல முடியாது. அப்படியே செய்தாலும் அது அவர்களது தனிப்பட்ட விஷயம். நான் புகைப்பிடிப்பது போல் நடித்தது படத்தின் தேவை. அதற்காக நான் தனிப்பட்ட வாழ்விலும் அப்படித்தான் என்று அதை சர்ச்சையாக்குவது தவறு. காலம் மாறுகிறது. பெண்கள் புகைப்பிடித்தாலும் அதை முன்னேற்றமாகவே பார்க்க வேண்டும். வரவேற்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.