நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் 'காவாலா' பாடல் டிரெண்டிங்கில் டாப் இடத்தை பிடித்துள்ளது. இந்த பாடலுக்கு திரைபிரபலங்கள் பலரும் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்தனர். அந்த வரிசையில் தன்னையும் இணைத்துக் கொள்ள விரும்பிய வீஜே பிரியங்கா பலமுறை நடனமாட முயற்சி செய்து பல்பு வாங்கியுள்ளார். டீஜே ப்ளாக் கூட பிரியங்காவுக்கு காவாலா பாடலுக்கு எப்படி நடனமாட வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறார். ஆனால், பிரியங்காவின் நடனத்தை பார்த்து கடைசியில் அவரே ஸ்டெப்பை மறந்துவிடுகிறார். இந்த நடனத்திற்காக பிரியங்கா செய்த முயற்சிகள் அனைத்தையும் ஒரு ஜார்னி வீடியோவாக வெளியிட்டுள்ள அவர், கடைசியில் 9க்கும் மேற்பட்ட டேக்குகளை எடுத்து இறுதியில் எனக்கு டான்ஸே வராது என சரண்டராகி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறார். அந்த வீடியோவில் பிரியங்கா அடித்த லூட்டியை பார்க்கும் ரசிகர்கள் 'உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை!' என கவுண்டமணி ஸ்டைலில் கிண்டலடித்து கலாய்த்து வருகின்றனர்.