ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அமீரும் பாவ்னியும் தங்களது காதலை உறுதி செய்தனர். அதிலிருந்து இப்போது வரை இருவரும் ஜோடியாக சேர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். ஜோடியாகவும் பல போட்டோஷூட்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதனையடுத்து இருவரும் எப்போது திருமண செய்தி சொல்ல போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர்ளுடன் பேசிய பாவ்னி ரெட்டியிடம், ரசிகர் ஒருவர் 'நீங்கள் சிங்கிளா?' என்று கேட்க அதற்கு பாவ்னி ‛ஆம்' என்று பதிலளித்துள்ளார்.
மற்றொரு ரசிகர் ‛எப்போது திருமணம்?' என்று கேட்க ‛நாளை தான். நீ வருகிறாயா அமீர்?' என கேட்டு அவரை டேக் செய்துள்ளார். இன்னுமொரு ரசிகர் 'நீங்களும் அமீரும் காதலிக்கிறீர்களா?' என்று கேட்டதற்கு, ‛அப்படியா?' என ஆச்சரியமாக கேட்டு மீண்டும் அமீரையே டேக் செய்துள்ளார். இதனால், ரசிகர்கள் பலரும் இருவருக்குமிடையே எதுவும் பிரச்னையா? ப்ரேக்கப் செய்துவிட்டார்களா? என்று கேட்டு வந்தனர். ஆனால், உண்மையில் பாவ்னி ரெட்டி அமீருடன் ப்ரேக்கப் செய்யவில்லை. ரசிகர்களிடம் பொய் சொல்லி விளையாடியிருக்கிறார். கடைசியாக அமீரின் புகைப்படத்தை ஸ்டோரியில் வைத்து சிரிப்பது போல் பாவனை செய்துள்ளார்.