'எதிர்நீச்சல்' தொடரில் நடித்து வருகிறவர் ஜீபா ஷெரீன். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த இவர் இந்த தொடரிலும் பர்ஹானா என்ற இஸ்லாமிய பெண்ணாக நடித்து வருகிறார். "ஒரு முஸ்லிம் நடிகை ஹிஜாப் அணிந்து இந்திய சீரியலில் நடித்தது நான் தான்" என பெருமையுடன் பேசி வருகிறார். இந்த நிலையில் ஜீபா பற்றிய செய்திகள் அமெரிக்க தொலைக்காட்சிகளில் இடம் பிடித்துள்ளது. அவர் அளித்த பேட்டி, சீரியலில் அவர் நடித்த காட்சிகள் இந்த செய்தியில் இடம்பெற்றுள்ளது. அந்த செய்தி துணுக்கு அமெரிக்காவில் சாலையோரம் உள்ள விளம்பர ஸ்கீரின்களில் ஒளிபரப்பாகி உள்ளது. இதனை ஜீபா தனது இன்ஸ்ட்டாகிராமில் பகிர்ந்துள்ளார். "உலகத்திடமிருந்து இந்த அன்பை நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் பர்ஹானாவை நேசித்ததற்கு நன்றி" என்று எழுதி உள்ளார்.