காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
சின்னத்திரை நடிகையான ஸ்ருதி சண்முகப்பிரியா தான் காதலித்து வந்த அரவிந்த் சேகர் என்பவரை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒருவருடம் மட்டும் ஆகியுள்ள நிலையில் அரவிந்த் சேகர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இதனையடுத்து செய்தி ஊடகங்களில் பல்வேறு வதந்திகளுடன் செய்தி வெளியாகி வந்தது. இதனால் வருத்தமடைந்த ஸ்ருதி சண்முகம் வதந்திகளை பரப்பாதீர்கள் என வீடியோ மெசேஜ் வெளியிட்டார்.
அதில், 'என் கணவர் கார்டியாக் அரஸ்ட் காரணமாக உயிரிழந்துவிட்டார். அவர் பாடி பில்டர் அல்ல. அவர் ஒரு சிவில் என்ஜினியர். பாடி பில்டிங்கை பேஷனாக எடுத்துக்கொண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றார். ஆனால், என் கணவர் இறப்பு குறித்து செய்தி ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. உங்களுக்கு விவரங்கள் வேண்டுமென்றால் என்னுடைய இந்த வீடியோவை எடுத்துக்கொள்ளுங்கள். தவறாக எதையும் பரப்பாதீர்கள் ' என அந்த வீடியோவில் வேண்டுகோள் வைத்துள்ளார்.