ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சின்னத்திரை தம்பதிகளான சம்யுக்தா, விஷ்ணுகாந்த் திருமணமாகி சில நாட்களிலேயே பிரிந்துவிட்ட நிலையில், ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம் சொல்லி வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் முதலில் லைவ் வந்த சம்யுக்தா, விஷ்ணுகாந்த் தன் உறவினருக்கு போன் செய்து தன்னை பற்றிய வீடியோ, ஆடியோக்கள் இருப்பதாக கூறி மிரட்டுகிறார் என்று கூறியிருந்தார். இதனையடுத்து மாலையில் லைவ் வந்த விஷ்ணுகாந்த் 'நான் யாரையும் மிரட்டவில்லை. சம்யுக்தா மற்றும் அவரது குடும்பத்தாரை என் குடும்பத்தாருடன் சந்தித்து பேசி சுமூகமாக முடிவெடுக்கவே அழைத்தேன்' என்று கூறியிருக்கிறார். அதற்கு சாட்சியாக சம்யுக்தாவின் சித்திக்கு போன் பேசிய ரெக்கார்டை லைவ்வில் போட்டு காண்பித்தார். போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விவகாரம் மற்றும் சம்மன் குறித்த சம்யுக்தாவின் குற்றச்சாட்டுக்கும் அந்த வீடியோவில் அவர் விளக்கமளித்துள்ளார். இதனையடுத்து இதுநாள் வரை விஷ்ணுகாந்தை கண்மூடித்தனமாக விமர்சித்த பலரும் தற்போது சம்யுக்தா தரப்பிலும் ஏதோ பிரச்னை இருக்கிறது. இருவரும் நேரில் சந்தித்து பேசி விரைவில் தீர்வு காண வேண்டும் என அட்வைஸ் செய்து வருகின்றனர்.