ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தொலைக்காட்சி வந்த புதிதில் சீரியல்களுக்கு தனி மதிப்பும் மரியாதையும் இருந்தது. குடும்ப பாங்கான கதைகள், நகைச்சுவை டிராமாக்கள், பக்தி நாடகங்கள் என தரமான சீரியல்களை எடுத்துக்கொண்டிருந்த தொலைக்காட்சி நிறுவனங்கள், இன்று டிஆர்பி வேட்டைக்காக கண்டதையும் கதையாக எடுத்து வருகின்றனர். வேற்று மொழி சேனல்களின் சீரியலை காப்பி பேஸ்ட் செய்து வருவதுடன் அதில் வருவது போலவே க்ளாமர் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகளையும் தமிழ் சீரியல் உலகிற்கு அறிமுகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் சீரியலில் முதலிரவு காட்சி, முத்தக்காட்சிகளைஒளிபரப்பியுள்ளனர். இதற்கு பலதரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. பெரியவர் முதல் சிறியவர் வரை குடும்பமாக பார்க்கும் ஒரு தொலைக்காட்சி தொடரில் இதையெல்லாம் காட்ட வேண்டுமா? இனி சீரியலுக்கும் சென்சார் தேவையா? என்பது போன்ற கேள்விகள் எழுந்து வருகிறது.