''சினிமாவுக்கு கடின காலம்... காப்பாற்றுங்கள்'': குரல் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் | 'டாக்சிக்' படத்தால் பின்வாங்கியதா 'ஜனநாயகன்' ? | பின்வாங்கியது ஜனநாயகன்... முந்துமா பராசக்தி | விஜய்க்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த அருள்நிதி பட இயக்குனர் | டாக்சிக் படம் : யஷ் பிறந்தநாளில் இந்த மாதிரியா அறிமுக வீடியோ வெளியிடுவது.? | சிவகார்த்திகேயன் பற்றி தவறான செய்தியை பரப்புகிறார்கள்: ரவிமோகன் வருத்தம் | பொங்கல் போட்டியில் 'ராட்ட' | கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு கிடைத்த ஆதரவு விஜயின் ஜனநாயகனுக்கு கிடைத்ததா? | கிரிசில்டா மீது மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக்: தேங்காய் சீனிவாசனிடம் எம்ஜிஆரின் கண்டிப்பும், கருணையும் |

இந்தியத் திரையுலகம் என்பதில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்கள்தான் முதன்மையாக உள்ளன. மற்ற மொழிப் படங்கள் குறைந்த அளவில் வெளியாகின்றன. வியாபார ரீதியாக ஹிந்தித் திரைப்படங்கள் நாடு முழுவதும், அதிக வெளிநாடுகளிலும் வசூலைப் பெறும் படங்களாக உள்ளன. தென்னிந்திய மொழிப் படங்களில் சில படங்கள் மட்டுமே பான் இந்தியா வசூலைக் குவிக்கின்றன.
கடந்த 2025ம் வருடத்தைப் பொறுத்தவரையில் ஹிந்திப் படங்கள்தான் அதிக வசூலைக் குவித்துள்ள படங்களாக இருக்கின்றன. அதற்கு முந்தைய சில வருடங்களில் தெலுங்கு, கன்னடப் படங்கள் வசூல் சாதனை புரிந்தன. கடந்த வருடத்தில் தனது வசூலை மீண்டும் மீட்டெடுத்துள்ளது ஹிந்தி சினிமா.
ஹிந்தி

2025ம் வருடத்தில் வெளிவந்த ஹிந்திப் படங்களில், 'துரந்தர்' படம் 1080 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து முறையே, சாவா - 800 கோடி, சாயாரா - 580 கோடி, வார் 2 - 300 கோடி, ஹவுஸ்புல் 5 - 250 கோடி, சிதாரே ஜமீன் பர் - 250 கோடி, ரைட் 2 - 240 கோடி, சிக்கந்தர் - 180 கோடி, தம்மா - 170 கோடி, ஜாலி எல்எல்பி 3 - 170 கோடி, ஸ்கை போர்ஸ் - 160 கோடி, தேரே இஷ்க் மே - 150 கோடி, கேசரி சாப்டர் 2 - 140 கோடி, ஜாட் - 120 கோடி, ஏக் தீவானே கி தீவானியத் - 110 கோடி, டீ டீ பியார் டீ 2 - 100 கோடி,” என வசூலித்துள்ளதாக பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025ல் வெளியான சுமார் 230 ஹிந்திப் படங்களில் மேலே குறிப்பிட்ட 16 படங்கள் 100 கோடி வசூலைக் கடந்த படங்களாக உள்ளன. இந்தப் படங்கள் மூலம் மட்டுமே சுமார் 4800 கோடி வசூலாகி உள்ளது.
தமிழ்

தமிழில் வெளியான படங்களில், “கூலி - 600 கோடி, குட் பேட் அக்லி - 300 கோடி, டிராகன் - 150 கோடி, விடாமுயற்சி - 130 கோடி, டியூட் - 100 கோடி, மதராஸி - 100 கோடி, டூரிஸ்ட் பேமிலி - 90 கோடி, தக் லைப் - 90 கோடி, பைசன் - 75 கோடி” என வசூலித்ததாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வெளிவந்தன. இவற்றின் மொத்த எண்ணிக்கை 1635 கோடி ரூபாய்.
தெலுங்கு

தெலுங்கில் வெளியான படங்களில், “ஓஜி - 300 கோடி, சங்கராந்திகி வஸ்துனம் - 300 கோடி, கேம் சேஞ்ஜர் - 200 கோடி, மிராய் - 150 கோடி, டாகு மகாராஜ் - 130 கோடி, ஹிட் 3 - 120 கோடி, குபேரா - 110 கோடி, ஹரிஹர வீரமல்லு - 110 கோடி, அகாண்டா 2 - 100 கோடி” என சுமார் 1520 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
கன்னடம்

கன்னடத்தில் வெளியான படங்களில், “காந்தாரா சாப்டர் 1 - 900 கோடி, மஹாவதார் நரசிம்மா - 300 கோடி, சு பிரம் சோ - 120 கோடி” என இந்த மூன்று படங்கள் மூலம் மட்டுமே 1320 கோடியை மொத்தமாக வசூலித்துள்ளது.
மலையாளம்

மலையாளத்தில் வெளியான படங்களில், “லோகா சாப்டர் 1 சந்திரா - 300 கோடி, எல் 2 எம்புரான் - 250 கோடி, சர்வம் மாயா - 100 கோடி, தொடரும் - 80 கோடி, டயஸ் இரே - 80 கோடி, களம் காவல் - 75 கோடி, ஆலப்புழா ஜிம்கானா - 70 கோடி, ரேகசித்ரம் - 50 கோடி, ஆபீசர் ஆன் டியூட்டி - 50 கோடி” என இவற்றின் மூலம் மொத்தமாக 955 கோடியை வசூலித்துள்ளன.
மராத்தி
மராத்தி மொழியில் வெளியாகி குறிப்பிடத்தக்க அளவில் ஓடிய 10 படங்கள் மூலம் சுமார் 70 கோடி வசூலாகியுள்ளது.
ஹாலிவுட் படங்கள்

இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களான, 'அவதார் பயர் அன்ட் ஆஷ் - 140 கோடி, மிஷன் இம்பாசிபிள் தி பைனல் ரெக்கோனிங் - 110 கோடி, எப் 1 - 100 கோடி, ஜுராசிக் வேர்ல்டு ரீபர்த் - 100 கோடி, டெமோன் ஸ்லேயர் - 70 கோடி” படங்கள் மூலம் 520 கோடி வசூலாகியுள்ளது.
மொத்த வசூல் 16 ஆயிரம் கோடி
மேலே குறிப்பிட்ட மொழிவாரியான படங்கள் மூலமாக மொத்தமாக 10,795 கோடி வசூலாகியுள்ளது. அதிக வசூலைக் குவித்த இந்தப் படங்களைத் தவிர ஏனைய மற்ற படங்கள் மூலம் கூடுதலாக சுமார் 5000 கோடி அளவிற்கு வசூல் கிடைத்திருக்கலாம்.
ஆக, 2025ல் மட்டும் இந்தியத் திரையுலகத்தில் 16,000 கோடி வரையில் மொத்த வசூல் வந்திருக்கும். கடந்த ஆண்டில் இந்திய அளவில் அனைத்து மொழிகளையும் சேர்த்து மொத்தமாக சுமார் 1600 படங்கள் வெளிவந்திருக்கும். இந்தப் படங்களுக்கான முதலீடுகள் 10,000 கோடி வரையிலாவது இருக்கலாம்.
திரைப்படத் தயாரிப்பு என்பது நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தரும் ஒன்றாக இருக்கிறது. சினிமா தியேட்டர்கள் வரை இருக்கும் அதன் தொழில் தொடர்ச்சி, அப்படியே சாட்டிலைட் டிவி, ஓடிடி, மொபைல் ரீல்ஸ், ஷார்ட்ஸ் என்றும் பரந்து விரிந்து வருகிறது. போட்ட முதலீட்டைத் திரும்ப எடுக்க முடியாமல் நஷ்டம் அடைந்தவர்கள்தான் திரையுலகத்தில் அதிகம் இருப்பார்கள். ஒரு சிலருக்கு மட்டுமே அது லாபத்தைத் தந்திருக்கும்.
இத்தனை கோடி முதலீடு, இவ்வளவு வேலை வாய்ப்பு என இருக்கும் திரையுலகத்திற்கு தற்போது ஓடிடி என்பது பெரும் சவாலாக உள்ளது. தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அனைத்து மொழித் திரையுலகினரும் ஒன்று கூடி திரைப்படத் தயாரிப்புத் தொழிலைக் காப்பாற்றியாக வேண்டிய ஒரு சூழ்நிலையில் உள்ளனர். யார் அதை முன்னெடுக்கப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி ?.