ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி | 'பத்த வைக்கும் பார்வைக்காரி' வைஷ்ணவி | அல்லு அர்ஜுன் பட வாய்ப்பு: 'நோ' சொன்ன பிரியங்கா சோப்ரா; காரணம் என்ன ? | 3 நாளில் 100 கோடி கடந்த 'குட் பேட் அக்லி' | பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் வெள்ளித்திரைப் பயணத்திற்கு வெளிச்சம் காட்டிய “வெண்ணிற ஆடை” | புதிய காதலியுடன் விழாவில் ஆமீர்கான் |
ராதிகா சரத்குமார் தயாரிப்பில் அதிக எதிர்பார்ப்பில் உருவாகி வரும் 'கிழக்கு வாசல்' தொடரிலிருந்து நடிகர் சஞ்சீவ் விலகினார். இதனையடுத்து சஞ்சீவுக்கு மாற்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் ரங்கநாதன் தான் ஹீரோவாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வராததால் இந்த செய்தி உண்மையானதா? என ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.
இந்நிலையில், தற்போது கிழக்கு வாசல் தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் ரேஷ்மாவுடன் வெங்கட் ரங்கநாதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரேஷ்மாவின் பிறந்தநாளை கிழக்கு வாசல் சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தான் கிழக்கு வாசல் தொடரில் வெங்கட் ஹீரோவாக நடிக்கிறார் என்பதை உறுதிசெய்துள்ளது.