அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
குக் வித் கோமாளியின் நான்காவது சீசனுக்கும் முந்தைய சீசனை போலவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீசனில், மக்களை பெரிதும் எதிர்பார்ப்பில் ஆழ்த்திய விஷயமே ஜி.பி.முத்துவின் என்ட்ரி தான். தவிர்க்க முடியாத காரணங்களால் பிக்பாஸ் வீட்டிலிருந்து பாதியிலேயே வெளியேறிய அவர், குக் வித் கோமாளியில் என்ட்ரியானது பலருக்கும் மகிழ்ச்சியை தந்தது.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜி.பி.முத்து, கடந்த சில எபிசோடுகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த வார புரோமோவிலும் ஜி.பி.முத்து இடம்பெறவில்லை. எனவே, அவர் விலகிவிட்டாரா என மக்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதுகுறித்து தற்போது விளக்கம் கொடுத்துள்ள ஜி.பி.முத்து, 'ரெஸ்ட் இல்லாமல் அலைந்து கொண்டிருப்பதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. 26 ஆம் தேதிக்கு மேல் மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு தான் சொல்ல முடியும். இப்போது மருந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறேன்' என்று கூறியுள்ளார். இதன்காரணமாக குக் வித் கோமாளியில் ஜி.பி.முத்து ரீ-என்ட்ரி கொடுப்பது சந்தேகத்திற்குரிய விஷயமாகிவிட்டது.