ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதரின் முதல் திருமணம் கசப்புடன் முடிவுக்கு வர, தன்னுடன் நடித்த சக நடிகரான அர்னவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் அர்னவுக்கு புதிய சீரியல் வாய்ப்பு கிடைக்க, அதில் நடித்து வரும் நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளார். இதனால் திவ்யாவுக்கும் அர்னவுக்கும் பிரச்னை எழுந்தது. இதில், கர்ப்பிணி என்று கூட பாராமல் திவ்யாவை அர்னவ் தாக்கியுள்ளார். இந்த விவகாரம் போலீஸ் புகார் வரை சென்று கடைசியில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் திவ்யா ஸ்ரீதர், மகளுக்கு முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு 'குழந்தைகள் கடவுளிடமிருந்து பிரிந்து வரும் நட்சத்திர துகள்கள், அப்படியொரு நட்சத்திரத்தை பெற்றெடுக்கும் பிறப்பின் வேதனையை அறிந்த அதிர்ஷ்டசாலி நான்' என மகள் பிறந்ததை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.