ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சூப்பர் சிங்கர் பிரபலமான செந்தில் - ராஜலெட்சுமி தம்பதியினர் நாட்டுபுற பாடல்களினால் தமிழ்நாட்டில் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளனர். சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமான இருவரும் தற்போது நடிக்கவும் ஆரம்பித்துள்ளனர். அதிலும், ராஜலெட்சுமி ஹீரோயினாக நடித்து வரும் லைசென்ஸ் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மற்ற செலிபிரேட்டிகளை போலவே ராஜலெட்சுமியும், ரீல்ஸ், டான்ஸ், போட்டோஷூட் என இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் டிரெண்டிங்கில் இடம்பிடித்து பலரையும் நடனமாட செய்து வரும் 'மைனரு வேட்டிக்கட்டி' பாடலுக்கு ராஜலெட்சுமி தனது கணவருடன் சேர்ந்து நடனமாடி ரீல்ஸ் வீடியோ போட்டுள்ளார். லைக்ஸ் குவித்து வரும் அந்த வீடியோ பார்க்கும் சிலர் ராஜலெட்சுமி முழுதாக ஹீரோயின் மூடுக்கு மாறிவிட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.