ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கலர்ஸ் தமிழ் சேனலில் 'இதயத்தை திருடாதே' தொடரின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நவீன், செய்தி வாசிப்பாளரான கண்மணியை திருமணம் செய்து கொண்டார். தற்போது கண்மணி கர்ப்பமாக இருக்கிறார். விரைவில் இந்த க்யூட் ஜோடிக்கு க்யூட்டான குழந்தை பிறக்கவுள்ளது. இந்நிலையில், நவீன் - கண்மணி இருவரும் 'கொட்டா காபி' என்ற டீக்கடையை ஆரம்பித்துள்ளனர். இதற்காக இரண்டு வருடம் பெயர் மட்டும் யோசித்ததாகவும், இது தங்களுடைய கனவு என்றும் கூறியுள்ளனர்.
ஒருபுறம் கர்ப்பமாக இருப்பதால் செய்தி சேனல் பக்கம் கண்மணி தலைக்காட்டுவதில்லை. அதேபோல் நவீனும் 'கண்ட நாள் முதல்' சீரியலுக்கு பிறகு எந்தவொரு ப்ராஜெக்டிலும் கமிட்டானதாக தெரியவில்லை. அப்படியிருக்க தற்போது அவர்கள் பிசினஸுக்குள் குதித்திருப்பது நல்ல ஒரு பேக்-அப் ப்ளான் என பலரும் பாராட்டி வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.