ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
திரைத்துறை, சின்னத்திரை, ஊடகம் என அனைத்திலும் பெண்களுக்கு எதிராக அட்ஜெஸ்மெண்ட் டார்ச்சர் இருக்கிறது. சமீபகாலங்களில் பெண்களும் தொடர்ந்து இதுகுறித்த சம்பவங்களை பொதுவெளியில் தைரியமாக பேசி வருகின்றனர். அண்மையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் லாவண்யா தனக்கு நடந்த அட்ஜெஸ்மென்ட் டார்ச்சர் பற்றி கூறியிருந்த நிலையில், தற்போது அதே தொடரில் நடித்து வரும் தீபிகாவும் தனக்கு நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
சின்னத்திரை நடிகையாக வலம் வரும் வீஜே தீபிகா சில திரைப்படங்களிலும் சிறு ரோல்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க ஆடிஷனுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கே தனி ரூமில் ஒரு நபர் படத்தில் முத்த காட்சி இருப்பதாக கூறி தனக்கு முத்தம் கொடுத்து அதை நடித்துக் காட்டுமாறு கூறியுள்ளார். உடனே, தீபிகா அந்த ரோலில் நடிக்க முடியாது வேறு ரோல் கொடுக்க சொல்லி கேட்க, 'உனக்கு முன்னால் வந்த 8 பேர் கிஸ் பண்ணிட்டு போயிருக்காங்க. உனக்கு மட்டும் கிஸ் கொடுக்க முடியாதா?' என்று கேட்டுள்ளார்.
இதனால் அந்த படத்தின் வாய்ப்பை உதறி தள்ளியதாக வீஜே தீபிகா கூறியுள்ளார். நடிகைகள் இப்படி வரிசையாக அட்ஜெஸ்மென்ட் டார்ச்சர் பற்றி கூறி வருவது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களுக்கு தக்க நடவடிக்கை எடுத்து பெண்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.