தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் |

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ரோஜா தொடரின் மூலம் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. தற்போது ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் நடித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன் யாரும் எதிர்பாராத வகையில் மலேசியாவில் வைத்து காதலர் ராகுல் வர்மாவை திடீரென திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்தில் உறவினர்களோ நண்பர்களோ இல்லை. இதனையடுத்து அவர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் பரவ, அதற்கு பிரியங்கா தற்போது விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
'நாங்கள் மலேசியா முருகன் கோயிலில் வைத்து திருமணம் நடத்த நினைத்தோம். அப்பா அம்மாவிற்கு விசா கிடைப்பதில் பிரச்னை இருந்ததால் வர முடியவில்லை. இது திட்டமிட்ட திருமணம் தான், ரகசிய திருமணம் இல்லை. சில வருத்தங்கள் இருக்கிறது. ஆனாலும், சீக்கிரமே அவர்கள் வீட்டிலும் எங்களை ஏற்றுக் கொள்வார்கள். இது சீக்ரெட் மேரேஜ் இல்லை ஹேப்பி மேரேஜ் தான்' என அதில் பேசியுள்ளார்.




